திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம் புது வணக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் என்ற விவசாயி. இவருடைய மனைவி சொர்ணம் (வயது 37). நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் சொர்ணம் நெல் நடவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
தி.மலை அருகே விவசாய பணியின் போது மின்னல் தாக்கியதில் பெண் பலி! - A woman died in a thunder near Vandavasi
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விவசாய நிலத்தில் பணி செய்யும் போது மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் பலியானார்.
வந்தவாசி அருகே இடி விழுந்து பெண் ஒருவர் பலி
அப்போது எதிர்பாராத மின்னல் தாக்கியது.இதில் சம்பவ இடத்திலேயே சொர்ணம் உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் தெள்ளார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:மதவாதத்தை தூண்டும் வீடியோ: இளைஞர் கைது