தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் கள்ளச்சாராயம் விற்ற பெண் குண்டர் சட்டத்தில் கைது! - Thiruvannamalai District News

திருவண்ணாமலை: கள்ளச்சாராயம் விற்ற பெண் ஒருவரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலையில் கள்ளச்சாராயம் விற்ற பெண் குண்டர் சட்டத்தில் கைது
திருவண்ணாமலையில் கள்ளச்சாராயம் விற்ற பெண் குண்டர் சட்டத்தில் கைது

By

Published : Sep 5, 2020, 3:15 PM IST

திருவண்ணாமலை நகரில் உள்ள சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பவுன்குமார். இவரது மனைவி ரேவதி(30), தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் அவர் மீது மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் பலமுறை வழக்குப் பதிவு செய்து வந்தனர். ஆனாலும் அவர் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.

இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பரிந்துரையின் பேரில், ஆட்சியர் கந்தசாமி, குற்றவாளி ரேவதியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 93 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கஞ்சா விற்பனை: தரங்கம்பாடி அருகே இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details