திருவண்ணாமலை திருக்கோயிலூர் சாலையில் நேற்று நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்வில் தாயை இழந்த இளம்பெண் ஒருவர் கோரிக்கை மனு அளித்திருக்கிறார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக உதவிகள் கிடைக்கும் என உறுதியளித்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு அப்பெண்ணுக்கு உதவி செய்துள்ளது.
இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், ’திருவண்ணாமலையில் தாயை இழந்த பெண் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வில் மனு கொடுத்திருந்தார்.