தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவில் இருந்த மனைவி, கணவனை கொலை செய்த வழக்கில் கைது!

கள்ளக்காதலுனுடன் கைகோர்த்து கணவனை கொலை செய்த மனைவி உள்பட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருமணம் மீறிய உறவில் இருந்த மனைவி கணவனை கொலை செய்த வழக்கில் கைது
திருமணம் மீறிய உறவில் இருந்த மனைவி கணவனை கொலை செய்த வழக்கில் கைது

By

Published : Dec 30, 2022, 4:58 PM IST

திருவண்ணாமலை:பெரணமல்லூர் அடுத்த கடுகனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லட்சுமிகாந்தன் வயது (43). இவருடைய மனைவி ராஜேஸ்வரி வயது (31). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு வாரம் முன்பு லட்சுமிகாந்தனுக்கும் ராஜேஸ்வரிக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் வெளியே சென்ற லட்சுமிகாந்தன் திரும்பி வீட்டுக்கு வரவில்லை.

இந்நிலையில் 4 நாட்கள் கழித்து, இவர்கள் வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் உள்ள புதரில் காயத்துடன் சடலமாக இறந்து கிடந்தார். இதுகுறித்து கிராம மக்கள் பெரணமல்லூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், ஆய்வாளர் நந்தினி தேவி மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பிரேதத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து செய்யார் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ராஜேஸ்வரிக்கு திருமணத்திற்கு முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் என்னும் நபரை காதலித்து வந்துள்ளார். இருப்பினும், பெற்றோர்கள் உறவினர் லட்சுமிகாந்தனுக்கு ராஜேஸ்வரியை திருமணம் செய்து வைத்தனர். இருப்பினும், சிவகுமார் ராஜேஸ்வரியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார்.

அதேபோல, செய்யாறு சிப்காட் காலனி கம்பெனியில் வேலை செய்து வந்த ராஜேஸ்வரி, அங்கு பணிபுரியும் கனகம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் உதயசூரியனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் ராஜேஸ்வரி சிவகுமாரிடம் பழகுவதை நிறுத்திக்கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார், தான் தான் ராஜேஸ்வரியின் கணவர் என்று கூறி ராஜேஸ்வரி வேலை செய்யும் கம்பெனிக்கு சென்று உதயசூரியன் மற்றும் ராஜேஸ்வரியிடம் தகராறு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ராஜேஸ்வரி உதயசூரியனை வற்புறுத்தினார். அதற்கு உதயசூரியன், ’உன் கணவனை கொன்றுவிட்டு நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம்’ என திட்டம் போட்டு உதயசூரியன் தனது மைத்துனர் உதவியுடன் லட்சுமிகாந்தனை கொலை செய்தனர்.

இதுகுறித்து செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், ஆய்வாளர் குமார், ஆய்வாளர் நந்தினி தேவி ஆகியோர் கொலையாளிகளை மூன்று பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தேமுதிக மாவட்டச் செயலாளரை மாற்றக்கோரி சொந்தக் கட்சியினரே ஆர்ப்பட்டம்: ஏன்?

ABOUT THE AUTHOR

...view details