திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் நேற்று (ஏப்.06) மாவட்டம் முழுவதிலும் 2 ஆயிரத்து 885 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. பாதுகாப்பு அறையில் வைத்து அறைக்கு சீல் வைக்கும் பணிகளில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் முண்ணிலையில் நடைபெற்றது.
இதையடுத்து செய்தியாளரைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியதாவது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இரண்டு இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு வாக்கு எண்ணும் மையத்திற்கும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.