திருவண்ணாமலைமாவட்டம் செங்கம் அடுத்த படி அக்ரஹாரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 175 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
நேற்று (ஜூன்.23) ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான 61 மாணவ மாணவிகளுக்கு காலை 11:30 மணிக்கு சத்து மாத்திரை (சிங்க் மாத்திரை) வழங்கியுள்ளனர். அதன் பின்னர் அதே பள்ளியில் மதிய உணவாக சத்துணவு மற்றும் முட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சத்து மாத்திரை மற்றும் சத்துணவு சாப்பிட்ட 19 மாணவர்கள், 24 மாணவிகள் என 43 பேருக்கு தலை சுற்றல், வயிற்று வலி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் அனைத்து மாணவர்களும் காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவ மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பாய்ச்சல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திடீரென மயக்கமடைந்த கல்லூரி மாணவிகள்...