திருவண்ணாமலையில் தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடியின மக்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில் முதல் மாவட்ட மாநாடு பண்ட ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பி. டில்லிபாபு கலந்துகொண்டு மாநாட்டு நிறைவு உரையாற்றினார்.
உரிமை வேட்டைக்கு தயாராகும் வேட்டைக்கார இன மக்கள்! - Thiruvannamalai
திருவண்ணாமலை: வேட்டைக்காரன் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவில்லை என்றால், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் பி. டில்லிபாபு தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "வேட்டைக்காரன் இன மக்களை பழங்குடி பட்டியலில் சேர்த்திட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தோம். இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் வேட்டைக்காரன் இன மக்களிடையே கள ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஊட்டியில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குநருக்கு உத்தரவிட்டார். ஆனால் பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் இதுவரை அந்த ஆய்வினை நடத்த முன்வரவில்லை.
வேட்டைக்காரன் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவில்லை எனில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வேட்டைக்காரன் இன மக்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்" என தெரிவித்தார்.