தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணம் கேட்டு தொந்தரவு செய்த போதை ஆசாமியை வெளுத்துவாங்கிய திருநங்கைகள்! - transgender issue

செங்கத்தில் திருநங்கைகளிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்த கஞ்சா போதை ஆசாமியை பேருந்து நிலையத்திற்குள் உருட்டு கட்டையால் திருநங்கைகள் சராமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

sengam new bus stand, thiruvannamalai district
திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் புதிய பேருந்து நிலையம்

By

Published : Jul 24, 2023, 12:14 PM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் புதிய பேருந்து நிலையம் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. இங்கு மக்கள் நடமாட்டத்துடன் எப்போழுதுமே பரபரப்பாக காணப்படும். இங்கு இரவு நேரத்தில் திருநங்கைகள் நின்றுள்ளனர். அங்கு வந்த இளைஞர் ஒருவர் திருநங்கையிடம் பணம் கேட்டு பிரச்னை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

செங்கம் அருகே உள்ள வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் செங்கம் பகுதியில் உள்ள சுஜாதா என்ற திருநங்கையுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இளைஞர் விக்னேஷ் நேற்று இரவு கஞ்சா போதையில் திருநங்கை சுஜாதாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

இதையும் படிங்க:ஆந்திராவின் மந்திராலயம் பகுதியில் 108 அடி உயர ராமர் சிலை - அமைச்சர் அமித் ஷா அடிக்கல்!

பணம் தர மறுத்தும் இப்பகுதியில் இருந்து செல்லுமாறும் கூறியுள்ளார். ஆனால் அங்கு இருந்து செல்லாமல் தொடர்ந்து திருநங்கையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருநங்கை சுஜாதாவின் தோழிகள் சேர்ந்து இளைஞரை உருட்டுக்கட்டையால் தாக்கி உள்ளனர்.

இதனால் அச்சம் அடைந்த இளைஞர் அங்கு இருந்து ஓடினார். ஆனால் திருநங்கைகள் விடவில்லை. ஓடிய இளைஞரை இவர்களும் விரட்டி விரட்டி அடித்தனர். பேருந்து நிலையத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்பு இளைஞரை விரட்டி அடித்ததைப் பார்த்த போலீசார் அங்கு வந்து இளைஞரை மீட்க முயன்றனர். போலீசார் முன்பும் திருநங்கைகள் இளைஞரை அடிக்க முற்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ச்சியாக போலீசார் இளைஞரை அங்கு இருந்து மீட்டு, அவர்களது இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தை அங்கு இருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க:என்ஐஏ சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் - எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முபாரக்

ABOUT THE AUTHOR

...view details