திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர காவல் துறையின் சார்பாக மாணவர் காவல் படையினருக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் தென்மாத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தனர்.
பின்னர் மாணவர் காவல் படையைச் சேர்ந்த மாணவர்களிடையே பேசிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, இரவு, பகல் பாராமல் உழைப்பவர்கள் காவல்துறையினர். அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று விசாரித்தால், எங்கள் அப்பா எப்போது செல்வார், எப்போது வருவார் என்பது எங்களுக்கு தெரியாது என்று காவல்துறையினரின் குழந்தைகள் கூறுவார்கள். காவலர்களின் மனைவிகள் கூறக் கேட்டிருக்கிறோம், பணத்தைத் தவிர வேறு உதவி எதுவும் என்னுடைய கணவரிடமிருந்து கிடைப்பதில்லை. எல்லா வேலைகளையும் நாங்களே செய்து கொள்கிறோம். இவ்வாறு அனைத்தையும் தியாகம் செய்துதான் காவல்துறையினர் பொதுமக்களுக்கு சேவை புரிகின்றனர் என்றார்.