திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நாட்டு மக்களின் நலனுக்காக மழை வரவேண்டி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை அமைத்து 108 மூலிகைப் பொருட்களைக் கொண்டு பர்ஜன்ய சாந்தி வருண ஜெப யாகம் நடத்தி பூர்ணாகிதி செய்தனர்.
மழை வேண்டி திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் வருண யாகம் - Temple
மழை வேண்டி திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் சிவாச்சாரியார்கள் வருண ஜெபம் செய்தனர்.
மழை வேண்டி திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் வருண ஜெப யாகம்
பின்னர் கலசநீரை மேள வாத்தியத்துடன் எடுத்துச் சென்று பிரம்ம தீர்த்தக் குளத்தில் ஊற்றி சிறப்பு பூஜை செய்தனர். இந்த வருண ஜப யாகத்தின் போது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருண பகவானை வழிபட்டு மழை வர வேண்டினர்.