தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 15, 2019, 9:01 AM IST

ETV Bharat / state

துப்புரவு தொழில், தனியார்மயமாதலை தடை செய்க..!

திருவண்ணாமலை: செங்கம் பேரூராட்சியில் துப்புரவுப்பணிகள் தனியார் வசம் சென்றதால், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்புரவு தொழில், தனியார்மயமாதல் ஆவதை தடை செய்க..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், நீர்தோட்டம் மகளிர் குழு மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆண்கள் குழு ஆகிய குழுக்கள், கடந்த 15 ஆண்டுகளாக துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்தன. தற்போது இப்பணியில், 96 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணியினை பேரூராட்சி செயல் அலுவலர், முதன்மை வேலை அளிப்பவராக இப்பணியை நிர்வகித்து வந்தார்.

இந்நிலையில் ஜூலை 4ஆம் தேதியன்று, துப்புரவுப் பணி செய்து வந்த 96 தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, 46 துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மட்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 துப்புரவுப் பணியாளர்களின் பணிகளை, எவ்வித சட்ட நியதிகளும் இல்லாமல் பறிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து வெள்ளியன்று, செங்கம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்புரவு தொழில், தனியார்மயமாதல் ஆவதை தடை செய்க..!

இத குறித்து சிஐடியு சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது, “கடந்த 15 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த 96 தொழிலாளர்களுக்கும் துப்புரவு பணியில் பணியாற்றிட உத்தரவு வழங்க வேண்டும். துப்புரவு பணிகளைச் செயல்படுத்த, தனியாரிடம் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்து, பேரூராட்சி நிர்வாகம் செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details