ஊரடங்கால் தமிழ்நாட்டில் மூடப்பட்டிருந்த மதுபான கடைகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டது. இந்தச் சூழலில் செங்கம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசபுரத்தில் உள்ள மதுபான கடையை திறக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள், பொதுமக்கள் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல் துறையின் சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து கடை திறப்பது இல்லை என உறுதியளித்த பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.