திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்கள், மாதந்தோறும் பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்வது வழக்கம்.
கரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 26ம் தேதி மாலை 3.50 மணிக்கு தொடங்கி மறுநாள் 27 ம் தேதி மாலை 2.42 மணிவரை பவுர்ணமி கிரிவலம் நேரம். இந்நிலையில், பக்தர்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.