தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெயலலிதா பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்! - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்

திருவண்ணாமலை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளில் பிறந்த 18 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வழங்கினார்.

tiruvannamalai 18 infants who born on jayalalithaa's birthday got gold rings
ஜெயலலிதா பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்!

By

Published : Feb 26, 2020, 2:06 PM IST

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாளான கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அன்று திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் 18 குழந்தைகள் பிறந்தன. 24ஆம் தேதி பிறந்த அந்த 18 குழந்தைகளுக்கும் தங்க மோதிரத்துடன் சீர் வரிசையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மோதிரம் வழங்கல்

இந்த நிகழ்ச்சியில் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகள் சாதனையாளர்களாக வருவார்கள் என்று வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. மேலும் 24ஆம் தேதி பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை இந்த மருத்துவமனையில் மிகவும் குறைவாக இருப்பதாகவும் கூறினர்.

ஜெயலலிதா பிறந்தநாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்!

இதையும் படிங்க:'முதலமைச்சர் பச்சை துண்டுக்கு உரிமையானவர்' - அமைச்சர் பதிலடி!

ABOUT THE AUTHOR

...view details