திருவண்ணாமலை: புதுப்பாளையம் அருகே உள்ள தாமரைப்பாக்கத்தின் ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி முனியப்பன் அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 40 ஏக்கர் நிலத்தை மீட்டுள்ளார்.
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகள்... ஊராட்சி மன்ற தலைவர் அசத்தல்... - ஊராட்சி தலைவர்
ஊராட்சிக்கு சொந்தமான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 40 ஏக்கர் நிலங்களை மீட்ட ஊராட்சி தலைவர் அப்பகுதியில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்துள்ளார்.
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகள்... அசத்திய ஊராட்சி மன்ற தலைவர்
அதோடு மீண்டும் ஆக்கிரமிக்காமல் இருப்பதற்காக 40,000 மரக்கன்றுகளை அப்பகுதியில் நடவு செய்ய முடிவு செய்துள்ளார். அந்த வகையில் முதல்கட்டமாக 25 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளார். இதனால் அவரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க:பருவ நெல் அறுவடை தொடங்கியும் கொள்முதல் நிலைய கட்டுமான பணிகள் முடியாததால் விவசாயிகள் வேதனை