திருவண்ணாமலை:பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தி தரும் தலமாகவும் விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நேற்று (அக் 22) ஐப்பசி மாதம் சனி பிரதோஷ விழா கோலாகலமாக நடந்தது.
ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரி நந்திக்கு ஐப்பசி மாத மஹா பிரதோஷ பூஜைகள் செய்யப்பட்டன. பொளர்ணமி மற்றும் அமாவாசை வரும் 2 தினங்களுக்கு முன்பு மகா நந்திக்கு மஹா பிரேதோஷம் நடைபெறுவது வழக்கம். அதில் சனி மகா பிரதோஷம் மிகவும் சிறப்புடையதாகும். நேற்று மாலை 4.30 மணியளவில் பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள், தூள் அபிஷேகத் தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டன.