திருவண்ணாமலை:அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா நவம்பர் மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. வருகின்ற டிசம்பர் மாதம் ஆறாம் தேதி அதிகாலை பரணி தீபமும் மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும்.
பத்து நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய விழாக்களில் ஒன்று மகாரத தேரோட்டம். தீபத் திருவிழாவின் திருநாளில் ஏழாம் நாளான, டிசம்பர் மாதம் 3ஆம்தேதி மாடவீதிகளில் பஞ்சமூர்த்திகளின் தேர்பவனி நடைபெறும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றால் கார்த்திகை தீபத் திருவிழா, மாட விதிகளில் நடை நடைபெறாமல் கோயிலின் 5ஆம் பிரகாரத்தில் நடைபெற்று வந்தது. இந்த பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாரத தேரோட்டம் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது.