தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு - போலீசார் தீவிர விசாரணை! - thiruvannamalai chain robbery

திருவண்ணாமலை : இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் ஏழு சவரன் செயினை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thiruvannamalai-robbery-issue
thiruvannamalai-robbery-issue

By

Published : Feb 12, 2021, 7:56 PM IST

திருவண்ணாமலை வானவில் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் குமரன். அவரது மனைவி அபிராமி (36). இவர் நேற்று முன்தினம் திருக்கோவிலூருக்கு உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு சுமார் 10 மணியளவில் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் அவர் தனது கணவருடன் சுமார் 10.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் தென்றல் நகர் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகம் வழியாக சென்றுள்ளார்.

அப்போது, அந்த வழியாக எதிரே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் திடீரென அபிராமி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதினர். பின்னர் அவர்கள் அபிராமியின் கழுத்தில் இருந்த ஏழு பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினர்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் அரிகிருஷ்ணன், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு சோதனை செய்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க : கூடலூர் அருக கல்லூரி மாணவர் தற்கொலை - போலீசார் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details