தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

108 ஆம்புலன்ஸ் தாமதம்: கைக்குழந்தையோடு குளுக்கோஸ் பாட்டிலை ஏந்தி பெற்றோர் காத்திருந்த அவலம்! - thiruvannamalai parents waiting with his ill child for ambulance

திருவண்ணாமலை: 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கைக்குழந்தைக்குப் போடப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலை கையில் ஏந்தியபடி பெற்றோர் காத்திருந்த அவலம் செங்கம் அரசு மருத்துவமனையில் அரங்கேறியுள்ளது.

thiruvannamalai parents waiting with his ill child for ambulance

By

Published : Nov 13, 2019, 11:58 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த புதுக்குளம் பகுதியில், காளியப்பன் - ரஞ்சிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் கைக்குழந்தைக்கு வலிப்பு ஏற்பட, குழந்தையை செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல அறிவுறுத்தினர்.

ஆனால் 108 ஆம்புலன்ஸ் குறித்த நேரத்தில் வராததால் மருத்துவமனைக்கு வெளியே குழந்தையை வைத்து தாய் வெகு நேரமாக அழுதுகொண்டும், குழந்தைக்கு போடப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலை தந்தை கையில் ஏந்திக்கொண்டும் நின்றது பார்ப்போருக்கு மிகுந்த வேதனையையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

ஆம்புலன்ஸுக்காக கைக்குழந்தையுடன் பெற்றோர் காத்திருந்த அவலம்

இந்த நாட்டில் ஒரு ஏழையாகப் பிறந்து வாழ்வதென்பது, எப்படிப்பட்ட சவால் நிறைந்தது என்பது இந்த ஒரு சம்பவத்தைப் பார்த்தாலே புரிந்துவிடும். இதுபோன்ற அவலங்கள் இனி நேரமாலிருக்க அரசு கூடுதல் ஆம்புலன்ஸ்களை இயக்க வேண்டும் என்பதுதான் அந்நிகழ்வைப் பார்த்த அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இதையும் படிங்க: வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்குத் தூண்டிய கணவன் உட்பட 4 பேருக்கு 10 வருட சிறை தண்டனை!

ABOUT THE AUTHOR

...view details