முன்னாள் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தங்கத்தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தங்கத் தேர் இழுத்த அமைச்சர் - சமய அறநிலையத்துறை அமைச்சர்
திருவண்ணமலை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயிலில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரம் தங்கத் தேரை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
அவருடன் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், நகரச் செயலாளர் செல்வம், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலருன் கலந்துகொண்டு தேரை இழுத்தனர். அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை பழைய ஆறாவது வார்டு பெரிய தெரு மேடு பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். பெண்களுக்குச் சேலை, ஆண்களுக்குச் சட்டையுடன் அவர் வழங்கினார்.
இதையும் படிங்க:ஜெயலலிதா இருந்திருந்தால் இம்மாதிரியான போராட்டங்கள் நடந்திருக்குமா? - பிருந்தா காரத்