திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்நிலையில் விழா நடைபெறுவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்புக்கூட்டம் திருவாண்ணாமலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பேசுகையில், கார்த்திகை தீபத்திருவிழாவில் பக்தர்களிடம் சுங்க வசூல், ஏல வசூல் என்ற பெயரில் வசூலிப்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். இதுவரை நடைபெற்ற கார்த்திகை தீபத்திருவிழாக்களை காட்டிலும் இந்தாண்டு பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்துதரப்படும். இதற்காக 14 சிறப்பு ரயில்கள் 34 மாநிலத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது என்றார்.