திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார். மேலும், கரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறுகையில், “திருவண்ணாமலையில் 121 வெளிநாட்டவர்கள் வந்தனர். அவர்களில் பலர் தங்களது நாட்டிற்கு திரும்பி விட்டனர்.
வீட்டு கண்காணிப்பில் 70 வெளிநாட்டவர்கள் - ஆட்சியர் தகவல்!
திருவண்ணாமலை: கரோனா பாதுகாப்பு குறித்து 70 வெளிநாட்டவர்கள் தீவிர வீட்டு கண்காணிப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையை ஆய்வு செய்த ஆட்சியர் கந்தசாமி
தற்போது 70 நபர்கள் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்களது விசா காலம் முடிந்தவுடன், அவர்கள் அனைவரும் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள். மேலும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கூடிய கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா அறிகுறியுடன் கரூரில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி!