திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்தும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பெற்றுக்கொண்டார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கல்வி உதவித் தொகை, வங்கிக் கடன் உதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை , உபகரணங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 506 மனுக்கள் பெறப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட மனுக்கள் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கி, உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி உத்தரவிட்டார். மேலும், நிலுவையிலுள்ள மனுக்களின் மீது தொடர் நடவடிக்கைகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 16 மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையாக மாதம் தலா ஆயிரம் ரூபாயும் இரண்டு நபர்களுக்கு முதியோர் உதவித்தொகையாக மாதம் தலா ஆயிரம் ரூபாயும் பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதையும் படிங்க: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்