தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ. 2.19 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 2.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேற்று (ஜூலை 24) ஆய்வு செய்தார்.

ரூ. 2.19 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள்
ரூ. 2.19 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகள்

By

Published : Jul 25, 2021, 7:46 AM IST

திருவண்ணாமலை: புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், காஞ்சி ஊராட்சி, காமாராஜர் நகரில் 183 வீடுகளுக்கு ரூ. 8.23 லட்சம் மதிப்பீட்டில் 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின்கீழ் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

'ஜல் ஜீவன் மிஷன்' திட்டம்

காஞ்சி ஊராட்சியில் 1,164 வீடுகளுக்கு ரூ. 1.09 கோடி மதிப்பீட்டில் 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின்கீழ் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்ற. தற்போதுவரை காஞ்சி ஊராட்சியில் 799 வீடுகளுக்கு புதியதாக குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

'தூய்மை பாரத இயக்கம்'

இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், நாகப்பாடி கிராமத்தில் பயனாளி முருகன் வீட்டில் 'தூய்மை பாரத இயக்கம்' திட்டத்தின் தனி நபர் இல்ல கழிப்பறை திட்டத்தின்கீழ்

  • ரூ. 12,000 செலவில் கழிப்பறை கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், நாகப்பாடி கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வெண்டும் என ஊராட்சி மன்றத் தலைவரிடம் மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். நாகப்பாடி ஊராட்சியில் 23 வீடுகளில் தலா ரூ. 12,000 செலவில் தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன.

'கிசான் சம்மான் நிதித் திட்டம்'

வீரானந்தல் ஊராட்சியில் ரூ. 5.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும் அவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து வீரானந்தல் கிராமத்தில் தனது 2.70 ஏக்கர் சொந்த நிலத்தில் மல்லாட்டா, கரும்பு உள்ளிட்ட விவசாயம் செய்துவரும் விவசாயி பெருமாள் என்பவரிடம் மாவட்ட ஆட்சியர் சிறு, குறு விவசாயி சான்று, பாரத பிரதமரின் 'கிசான் திட்டம்' வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார்.

அப்போது விவசாயி பெருமாள், "தனக்கு எந்த சான்றும் இல்லை. எவ்வித பயனும் தான் பெறவில்லை' எனத் தெரிவித்தார். சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உடனடியாக விவசாயி பெருமாளுக்கு சிறு, குறு விவசாயி சான்று வழங்குவதற்கும், பாரத பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின்கீழ்

  • ஆண்டுக்கு ரூ. 6000 கிடைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

'ஆவாஸ் யோஜனா திட்டம்'

வீரானந்தல் ஊராட்சியில் பாரத பிரதமரின் 'ஆவாஸ் யோஜனா' திட்டத்தின்கீழ்

  • 2019-2020ஆம் ஆண்டு தலா ரூ. 1.70 லட்சம் மதிப்பீட்டில் 18 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,

போளுர் சாமாலை சாலையில் பிரதம மந்திரி கிராம திட்டத்தின்கீழ்

  • ரூ. 71.08 லட்சம் மதிப்பீட்டில் 2.2 கிலோ மீட்டர் நீளம் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க: 'முதலமைச்சர் சுவரொட்டி மீது சேற்றை பூசியது யார்?'

ABOUT THE AUTHOR

...view details