திருவண்ணாமலை: செங்கம் அடுத்த தரடாப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆறாம் வகுப்பு பள்ளி அறையின் மேற்கூரை இன்று (ஜூலை 06) திடீரென இடிந்து விழுந்ததில் அதே வகுப்பைச் சேர்ந்த முகேஷ், ஜனார்த்தனன் ஆகிய இருவர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியரை மீட்டு தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தரடாப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து பின்னர் ஊராட்சி வட்டாட்சியர் பரிமளா ஊராட்சி மன்ற தலைவர் கிராமம் நிர்வாக அலுவலர் ஆகியோர் கட்டடத்தை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி கட்டடம் மேற்கூரை இடிந்து விழுந்து மாணவர்கள் காயம் அடைந்த சம்பவம் இப்பகுதியில் மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு சென்ற பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் காம்பவுன்ட் சுவர் இடிந்து விபத்து - போராட்டம்!