திருவண்ணாமலை: செ.அகரம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ.சந்தியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ஒவ்வொரு ஆடி மாதமும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் விரதம் இருந்து பொங்கலிட்டு நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையில் தொடங்கி தொடர்ச்சியாக பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை ஒட்டி நேற்று(ஆக-16) சின்ன கோலாப்பாடி, செ. அகரம், பண்டிதப்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். மேலும், பொங்கல் வைத்து கிடாவெட்டி நேர்த்திக் கடனையும் செலுத்தினர்.