தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகாராஷ்டிராவில் தவிக்கும் தி.மலை தமிழர்கள்: ஆட்சியரிடம் மீட்க கோரிக்கை!

திருவண்ணாமலை: மகாராஷ்டிரா மாநிலத்திற்கு கூலி வேலைக்குச் சென்ற 215 கூலித் தொழிலாளிகளை மீட்டுவரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் மனு அளித்தனர்.

மகாராஷ்டிராவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்: மீட்க கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
மகாராஷ்டிராவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள்: மீட்க கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

By

Published : May 15, 2020, 1:57 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மணிக்கல், புளியம்பட்டி, கருங்காலிப்பட்டி மேல்புழுதியூர் கிராமங்களைச் சேர்ந்த 215 கூலித் தொழிலாளிகள் தமிழ்நாட்டிலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்திற்குப் பிழைப்புத் தேடி, கூலி வேலைக்காகச் சென்றனர்.

மகாராஷ்டிராவில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்: மீட்கக் கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கரோனாவால் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து இயங்காததால் அத்தொழிலாளர்கள் தமிழ்நாடு திரும்ப முடியாமல் வேதனை அடைந்துவருகின்றனர்.

இது தொடர்பாக அவர்கள், "கடந்த 60 நாள்களாக தங்களின் சொந்த பந்தங்களை விட்டு உணவுக்கு வழியில்லாமல், வேலையும் இல்லாமல், வாழ்வாதாரம் இன்றி தவித்துவருகிறோம்.

மகாராஷ்டிராவில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்: மீட்கக் கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

பெரும் இன்னலுக்கு ஆளாகி அவதிப்பட்டுவருவதால் நாங்கள் உடனடியாகச் சொந்த ஊர் திரும்புவதற்கு மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனக் கண்ணீர் மல்க கோரிக்கைவைத்தனர்.

இதையடுத்து, அவர்களின் உறவினர்கள் திருவண்ணாமலை ஆட்சியரிடம் மகாராஷ்டிராவில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களை மீட்க கோரிக்கைவிடுத்து மனு ஒன்றை அளித்தனர்.

மகாராஷ்டிராவில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்: மீட்கக் கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

அந்த மனுவில், "கரோனாவால் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எந்தவித வேலையும் இல்லாமல், வருமானமின்றி, வெறுமனே இருப்பதால் கூலித் தொழிலாளர்களைச் சொந்த ஊர் அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்திருந்தனர்.

இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்திகள் எதிரொலி: ம.பி.யிலிருந்து காரைக்கால் மாணவர்கள் 17 பேர் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details