திருவண்ணாமலை: தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கத்தின் 55 ஆவது மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று (மே27) மற்றும் இன்று (மே 28) ஆகிய இரண்டு நாட்கள் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக, மின்வாரிய பணியாளர்கள் அனைவரும் ஏற்கும் வகையில் ஒரு சிறப்பான ஊதிய உயர்வு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கத்தின் பொதுக்குழு நன்றியை தெரிவித்தது. மேலும் மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி, மின்சார சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிட அனுமதிக்காமல் அச்சட்ட முடிவினை பாராளுமன்ற நிலை குழுவிற்கு அனுப்ப செய்த தமிழ்நாடு முதல்வருக்கு இந்த பொது குழுவில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தினை மின்வாரிய பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், மின்வாரியத்தில் மேற்கொள்ளப்படும் அவுட்சோர்சிங் முறையை தமிழ்நாடு அரசு கைவிட வலியுறுத்தியும், மின்வாரியத்தில் காலியாக உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க:‘வசூல் ராஜா’ பட பாணியில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு - ட்ரான்ஸ்மீட்டர் மூலம் தேர்வெழுதிய மாணவர் கைது!