திருவண்ணாமலை:அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு வருகைத் தரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில் அறிக்கப்பட்டுள்ளது.
திருச்சி - வேலூர் சிறப்பு ரயில்:இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிசம்பர் 6 முதல் 8-ம் தேதி திருச்சியில் 3.45 மணிக்கு புறப்படும் வண்டி எண்-06890 நள்ளிரவு 12.40 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்டை சென்றடைகிறது. மறுமார்கத்தில் வேலூர் கண்டோன்மெண்டில் இருந்து நள்ளிரவு 1.30 மணிக்கு புறப்படும் ரயில்(06889) மறுநாள் காலை 10.45 மணிக்கு திருச்சி சென்றடைகிறது. இந்த ரயில்களானது கடலூர் திருப்பாதிரிப்புலியூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விழுப்புரம், வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, திருக்கோவிலூர், திருவண்ணாமலை, போளூர், ஆரணி சாலை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.