திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர், நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் காவல் துறையினர் நகரப்பகுதிகளில் போதைப்பொருள்கள், கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனை குறித்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், பழைய கார்கானா பகுதி பழனி என்பவரது வீட்டில் 2.2 கிலோ கிராம் கஞ்சா பதுக்கிவைத்திருந்த மாரிக்கண்ணு (45), சமுத்திரம் காலனி செல்வக்குமார் (40) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
அதில் தீபிகா என்பவர் தப்பியோடியுள்ளார். அதைத்தொடர்ந்து, சமுத்திரம் காலனியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரது வீட்டில் 1.6 கிலோ கிராம் கஞ்சா பதுக்கிவைத்திருந்த மங்கை (38), அசோக்குமார் (47) இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
அதேபோல் சமுத்திரம் காலனியைச் சேர்ந்த சேதுபதி என்பவரின் வீட்டில் 2.2 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்செய்யப்பட்டது. ஆனால் சேதுபதி தப்பியோடிவிட்ட நிலையில் காவல் துறையினர் அவரைத் தேடிவருகின்றனர். சோதனையில் மொத்தமாக இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா, கள்ளச்சாராய கேன்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
2 பெண்கள் உள்பட 4 பேர் கைது இதையும் படிங்க:புதுச்சேரியில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் - நான்கு பேர் கைது