தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணனின் நிலத்தை அபகரித்த தங்கை - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தீக்குளிக்க முயற்சி!

திருவண்ணாமலை: நிலத்தகராறு பிரச்னையில் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததன் காரணத்தினால் ஆட்சியர் அலுவலகம் முன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sister who looted her brother's land
Sister who looted her brother's land

By

Published : Sep 7, 2020, 10:43 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த மல்லிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்த முயற்சித்தபோது பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த மல்லிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது தங்கை அம்பிகா. இந்நிலையில் செல்வராஜிற்கு சொந்தமாக 2.5 சென்ட் நிலம் இருந்துள்ளது. இதனை அவரது தங்கை ஆக்கிரமிப்பு செய்து, ஆறு மாத காலமாக தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த செல்வராஜ், இன்று(செப்.07) தனது குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேருடன், மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு வந்து தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அருகிலிருந்த காவலர்கள் அவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து காப்பாற்றி, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்ணனின் நிலத்தை அபகரித்த தங்கை - குடும்பத்தைச் சேர்ந்தோர் தீக்குளிக்க முயற்சி

இதுகுறித்து செல்வராஜ் கூறுகையில், 'அம்பிகா எனது 2.5 சென்ட் நிலத்தை அபகரித்துக்கொண்டு, கடந்த ஆறு மாத காலமாக எங்களை தொந்தரவு செய்து வருகிறார். இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் காவல் துறை அம்பிகா மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு எனது நிலத்தை மீட்டுத்தரவேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:’கழுதைப் பால் குடித்த எங்களுக்கு கரோனா வராது’ - பணிக்கு கிளம்பிய நரிக்குறவர்

ABOUT THE AUTHOR

...view details