திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் பணியாற்றிவந்த காவல் உதவி ஆய்வாளர் முருகதாஸ், திருவண்ணாமலை சண்முகா மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் அவருக்குத் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ திடீர் மரணம்! - தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ திடீர் மரணம்
திருவண்ணாமலை: உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் திடீர் மரணமடைந்தார்.
SI police died in heart attack during election duty
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர் பரிசோதித்த பின் உயிரிழந்ததாகத் தெரிவித்தார். உடற்கூறாய்வுக்காகத் திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தபால் வாக்களிக்க மறுப்பு: அரசு அலுவலர்கள் சாலைமறியல்