திருவண்ணாமலை:சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி பள்ளி சென்றுவருகின்றனர்.
இந்த விடுதியிலுள்ள மாணவர்களுக்கு, விடுதியின் துணை காப்பாளர், பாலியல் தொல்லை கொடுத்து வந்ததுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் ஆன்லைன் மூலமாக, குழந்தைகள் நலத்துறைக்கு ஆன்லைனில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் விடுதிக்கு சென்று விசாரணை நடத்திய அலுவலர்கள், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுவந்ததை உறுதி செய்தனர்.