திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நவீன கலையரங்கத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அதன் பின் பேசிய அவர், '' ரூ.28 ஆயிரத்து 750 கோடியை கல்வித் துறைக்கு ஒதுக்கி, நாட்டிலேயே தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவ - மாணவிகளுக்குச் சீருடைகளை மாற்றி, தனியார் பள்ளிக்கு நிகராக செயல்படுத்தப்படுகிறது '' எனவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், '' 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆடிட்டிங் (சிஏ) பயிற்சி, தொழில் துறை பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு அளிக்கப்படும். தொழில் நிறுவனங்களுக்குத் தணிக்கை அறிக்கை செய்யும் பணிக்கு சுமார் 10 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், தற்போது இரண்டு லட்சம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர். எனவே, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் சிஏ பயிற்சி அளிக்கப்படுகின்றன'' எனக் கூறினார்.