தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சத்துணவுத் திட்டத்தால் கல்வித்திறன் மேம்படுகிறது' - சேவூர் ராமச்சந்திரன் - Savur Ramachandran

திருவண்ணாமலை: சத்துணவு திட்டத்தின் மூலம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவு வழங்கப்படுவதால் அவர்களின் கல்வித்தரம் மேம்படுகிறது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சேவூர் ராமச்சந்திரன்

By

Published : Jun 3, 2019, 8:21 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,666 சத்துணவு மையங்களுக்கு, 8.41 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுகாதார பெட்டகத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவுப் பணியாளர்களுக்கு வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், "சத்துணவு திட்டத்தின் மூலம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவு வழங்கப்படுவதால் அவர்களின் கல்வித் தரம் மேம்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, செய்யார் சட்டப்பேரவை உறுப்பினர் தூசி மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details