திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி உத்தரவின்பேரில் காவல் துறையினர், தெள்ளார் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 33 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பிலான ஹான்ஸ்-1500 பாக்கெட்கள், கூலிப்-180 பாக்கெட்கள் உள்ளிட்ட குட்கா பொருள்கள் கடத்திவரப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதையடுத்து காவல் துறையினர், குட்கா பொருள்கள், கார் ஆகியவற்றைப் பறிமுதல்செய்து காரில் வந்த இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் குட்கா கடத்திவந்தவர்கள் ஆனந்தராஜ் (வெண்பாக்கம் தாலுகா), சுதாகர் (தாமல் கிராமம், காஞ்சிபுரம்) என்பது தெரியவந்தது. அதையடுத்து அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:ரூ. 42 லட்சம் மதிப்பிலான பான் மசாலா பறிமுதல்