தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சாலையின் நடுவே மரண பள்ளம்' - விபத்தை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை - பள்ளம்

திருவண்ணாமலை: சாலையின் நடுவே உள்ள பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

PUBLIC DEMAND

By

Published : Aug 2, 2019, 2:02 AM IST

திருவண்ணாமலை காந்திநகர் விடிஎஸ் ஜெயின் மேல்நிலைப்பள்ளி அருகே சாலையின் நடுவில் மிகப்பெரிய பள்ளம் இருக்கிறது. இந்த சாலையை தினசரி ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர் பயன்படுத்துவதால் விபத்து நேரிடும் அபாயம் உள்ளதாக பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சாலையின் நடுவே மரண பள்ளம்

இதைத் தொடர்ந்து நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சாலையில் இரவு நேரத்தில் நடந்து செல்பவர்களும், இரு சக்கர வாகனத்தில் செல்வோரும் எதிர்பாராமல் விபத்துக்குள்ளாக நேரிடும்.

விபத்தை தடுக்க பொது மக்கள் கோரிக்கை

மேலும் சாலையில் உள்ள பள்ளத்தை உடனடியாக மூட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details