தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 6, 2021, 9:20 PM IST

ETV Bharat / state

சிக்கனுக்கு ஆசைப்பட்ட மூதாட்டி; உணவுக் குழாயில் சிக்கிய எலும்பு அகற்றம்!

திருவண்ணாமலை: அரசு மருத்துவமனையில் 65 வயது மூதாட்டியின் உணவுக் குழாயில் சிக்கிக் கொண்ட 5 செ.மீ. அளவுள்ள கோழி எலும்பு துண்டை அறுவை சிகிச்சையின்றி எண்டோஸ்கோப் மூலம் வெற்றிகரமாக மருத்துவர்கள் அகற்றினர்.

மூதாட்டியின் உணவு குழாயில் சிக்கிய கோழி எலும்பு அகற்றம்
மூதாட்டியின் உணவு குழாயில் சிக்கிய கோழி எலும்பு அகற்றம்

திருவண்ணாமலை அடுத்த ஆருத்திராப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் பழனி என்பவரது மனைவி ராஜாமணி (65). இவர் கோழி இறைச்சி சாப்பிட்டார். அப்போது எலும்பு துண்டு அவரது தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக அவரால் தண்ணீர் கூட பருக முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனில்லை. இதையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராஜாமணி அனுமதிக்கப்பட்டார். அவரை காது, மூக்கு, தொண்டை துறையின் தலைவரான மருத்துவ நிபுணர் இளஞ்செழியன், சிறப்பு மருத்துவர் கமலக்கண்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது மூதாட்டியின் உணவுக் குழாய் பாதையில் அடைப்பு இருப்பது உறுதியானது.

பின்னர் மருத்துவர் இளஞ்செழியன் தலைமையில் 4 பேர் கொண்ட மருத்துவக் குழு அறுவை சிகிச்சை இல்லாமல் எலும்பு துண்டை அகற்ற முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து மூதாட்டிக்கு எண்டோஸ்கோப் முறையில் 2 மணி நேரம் முயற்சிக்குப் பிறகு உணவுக் குழாயில் சிக்கிக் கொண்ட 5 செ.மீ. அளவுள்ள கோழி எலும்பு துண்டை வெற்றிகரமாக மருத்துவர்கள் அகற்றினர்.

இதையும் படிங்க: தவறான மருத்துவத்தால் உயிரிழந்த பெண்ணின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details