திருவண்ணாமலை:ஆரணி டவுன் காந்திநகரில் வசித்து வருபவர் கம்பி கட்டும் கூலி வேலை செய்யும் தொழிலாளி முரளி. நேற்று ( செப்-11 ) பிற்பகலில் முரளி தன்னுடைய உறவினரின் காரிய சடங்கிற்காக ஆரணி பாலாஜி பவன் சைவ உணவகத்தில் 35 சாப்பாடு வாங்கி சென்றுள்ளார்.
உறவினர்கள் சாப்பிடும் போது பீட்ரூட் பொரியலில் இறந்த எலியின் தலை இருந்துள்ளது. இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த முரளி மற்றும் அவரது உறவினர்கள் 20 க்கும் மேற்பட்டோர் பாலாஜி பவன் ஓட்டலுக்கு சென்று, உணவில் கிடந்த எலி தலையை காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.