திருவண்ணாமலை: ஆரணி மற்றும் களம்பூர் பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த அரிசி ஆலை தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் அரிசி சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் ஆரணியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில், நாள் ஒன்றுக்கு சுமார் 300-லிருந்து 500 டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு அரிசிக்கு 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை அறிவித்துள்ளது.