திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அந்தனூர் ஊராட்சிக்கு சொந்தமான ஓமங்குட்டை குளம், மேல் செங்கம், துரிஞ்சாபுரம் பகுதி மக்களுக்கு நீராதாரமாக விளங்கிவந்தது. மழைக்காலங்களில் நீரை இந்தக் குளத்தில் தேக்கி வைத்து அதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
மேலும் அருகில் உள்ள குடிநீர் கிணறுகள் நிரம்பவும், நிலத்தடி நீர் பெருகவும் ஏதுவாக இருந்தது. தற்போது அதே பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவர் குளத்தை சமன் செய்து குடியிருப்பு வீடு கட்டிவருகிறார்.
குளத்தை காணவில்லை என புகார் பொதுமக்கள் இதுகுறித்து கேட்டதற்கு முறையாக ஊராட்சி நிர்வாகத்திடம் பணம் கொடுத்து அந்த இடத்தை வாங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
எனவே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உள்ள குளத்தை தனி நபருக்கு வீடு கட்டுவதற்கு அங்கீகாரம் கொடுத்த ஊராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு செய்துள்ள குளத்தை மீட்டு தூர்வாரி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு: பழைய இரும்புக் கடைக்குச் செல்லும் விசைத்தறிகள்...?