தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வழக்குப் பதிவை தவிர்க்க லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளர்கள் கைது!

திருவண்ணாமலை: வழக்கைப் பதிவு செய்யாமல் இருக்க, லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர்
காவல்துறையினர்

By

Published : Mar 6, 2020, 9:56 AM IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு அருகே உடமை காப்பகம் நடத்தி வருகிறார் கிருஷ்ணவேணி. இங்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஒருவர் மடிக்கணினியுடன் பையை வைத்துள்ளார். திரும்ப வந்து பையை வாங்கியபோது, மடிக்கணினியை காணவில்லை. இதுகுறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து, கிருஷ்ணவேணியை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கிருஷ்ணவேணிக்கு ஆதரவாக அவரது மருமகன் அசோகன் காவல் நிலையத்துக்கு வந்தார். அப்போது, காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் இளஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளனர்.

லஞ்ச ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறையினர்

அசோகன், முதல் தவணையாக 15 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். மீதி பணத்தையும் தருமாறு அசோக்கிற்கு அவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். இதனிடையே, மனம் மாறிய அசோகன் லஞ்சம் கொடுக்க விரும்பாமல், திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகாரளித்தார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதனை அவர்களுக்கு வழங்க அறவுறுத்தினர். அதன்படி, அசோகன் இரண்டு உதவி ஆய்வாளர்களிடமும் காவல்நிலையத்தில் வைத்தே ஐந்தாயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை கொடுத்தார். இதைக் கண்காணித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், காவல் நிலையத்திற்குள் புகுந்து உதவி ஆய்வாளர்கள் இளஞ்செழியன், அன்பழகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி 2 பேரையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க: சமூக வலைதளத்தில் காவல் துறையினரை திட்டிய அஜித் ரசிகர் கைது

ABOUT THE AUTHOR

...view details