சென்னை வளசரவாக்கத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆல்வின் கோல்டன் சிட்டி லிமிடெட் நிதி நிறுவனம் 2013ம் ஆண்டு தொடங்கியது. இந்த நிறுவனத்தில் FD, RD போன்ற திட்டங்களில் ஐந்து வருட வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பணத்தை கட்டி வந்துள்ளனர். இந்நிலையில், ஐந்து வருட முடிந்தும் முதிர்வுத் தொகை கிடைக்காததால் வாடிக்கையாளர்கள், ஏஜென்டுகளை அணுகி தங்களுடைய பணத்தை பெற்று தருமாறு கேட்டுள்ளனர். இன் நிறுவனத்தின், தலைவர் பாப்பா ராஜேந்திரன் இறந்துவிட்டதால், அவரது மனைவி அந்த நிறுவனத்தை ஏற்று நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பாப்பா ராஜேந்திரனுடைய மனைவி தற்போது வரை முதிர்வுத் தொகையை வடிக்கையாளர்களுக்கு செலுத்தவில்லை.
நிதி நிறுவனம் மோசடி: நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு - thiruvanamalai
திருவண்ணாமலை: ஆல்வின் கோல்டன் சிட்டி நிறுவனத்தில், வாடிக்கையாளர்களின் பணம் முதிர்வடைந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் முதிர்வுத் தொகை திருப்பி செலுத்தாத அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாடிக்கையாளர்கள், ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
நீதி நிறுவனம் மோசடி நடவடிக்கை எடுக்க கோரி மனு
இந்நிலையில், நிறுவனர் பாப்பா ராஜேந்திரன் இறந்து விட்டதை காரணம் காட்டி அனைத்துக் கிளைகளையும் மூடி விட்டதாகவும், மேலும் வாடிக்கையாளர்கள் கட்டிய பணத்தைத் திருப்பி செலுத்தாத தற்போதைய தலைவர் தேவி பாப்பா ராஜேந்திரனை கண்டுபிடித்து, வாடிக்கையாளர்களின் முதிர்வுத் தொகையை திரும்ப பெற்று தர வேண்டும் என்று கோரி வாடிக்கையாளர்கள், ஏஜென்டுகள் என 150க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.