தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்த வேப்பிலையுடன் திரியும் மக்கள்! - திருவண்ணாமலையில் வேப்பிலையுடன் திரியும் பொதுமக்கள்

திருவண்ணாமலை: அக்னி நட்சத்திர வெயில் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் தங்களது தலையின் மேல் வேப்பிலையை வைத்துச் செல்கின்றனர்.

வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்த வேம்பு இலையுடன் திரியும் மக்கள்!
வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்த வேம்பு இலையுடன் திரியும் மக்கள்!

By

Published : May 15, 2020, 10:28 AM IST

திருவண்ணாமலை அடுத்த மங்கலம் பகுதியில் அக்னி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் தங்களது தலையின் மேல் வேப்பிலைகளை வைத்துக் கொண்டு செல்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் வேப்பிலையை தங்களது தலையின் மேல் வைத்துக்கொண்டு அக்னி வெயிலின் தாக்கத்தை போக்க விநோத செயலில் ஈடுபட்டுவருகின்றனர்.

வேப்பிலை சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுத்துவதால் தற்போது கரோனா தாக்கம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைவரும் வேப்பிலையை கரோனாவுக்கு எதிராகவும் பயன்படுத்தி வருவதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: பெரம்பலூரில் வாட்டிவதைக்கும் வெயில்: களைகட்டும் கற்றாழை ஜூஸ் விற்பனை!

ABOUT THE AUTHOR

...view details