திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை இன்று துரிஞ்சாபுரம் ஒன்றிய கூட்டமைப்பின் சார்பில் ஊராட்சி மன்றத் தலைவர்களின் அதிகாரங்களில் அரசு அலுவலர்கள் தலையிடுவதாகவும், ஊராட்சி மன்ற செயலாளர்கள் தலைவர்களை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் கூறி முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பப்பட்டன.
ஊராட்சியில் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பெறுப்பேற்றும், இன்று வரை துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் தலைவர்களுக்கான அதிகாரங்களை அரசு அலுவலர்கள் கொடுக்காமல் அலுவலர்களும், ஊராட்சி மன்ற செயலாளர்களும் தன்னிட்சையாக முடிவெடுத்து பல பணிகளை செயல்படுத்தி வருவதாகவும், அலுவலர்களின் துணையோடு ஊராட்சி மன்ற செயலாளர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.
குறிப்பாக 100 நாள் வேலை திட்டம், ஊராட்சிகளில் வரும் பணிகள், ஊராட்சிப் பணிதள பொறுப்பாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பல வேலைகளை தலைவர்களுக்கு தெரியாமல் அலுவலர்களின் துணையுடன், ஊராட்சி மன்ற செயலாளர்கள் செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.