ஆடி அமாவாசை நாளில் நீர் நிலைகளில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது நம் சந்ததியை நல்வழிபடுத்தும் என்பது ஐதீகம்.
ஊரடங்கு உத்தரவு; தர்ப்பணம் கொடுக்க முடியாமல் பொதுமக்கள் தவிப்பு - திருவண்ணாமலை செய்திகள்
திருவண்ணாமலை: ஊரடங்கு உத்தரவால் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.
தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசிப்பெற்று பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. தற்போது 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதால் பொதுமக்கள் நேரில் சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள ஐயன்குளக்கரையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இன்று ( ஜூலை 20) மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஒரு சில பேர் வந்து கொடுத்து சென்றனர்.
மேலும் ஊரடங்கு உத்தரவால் குளக்கரை முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனால் தர்ப்பணம் கொடுக்க முடியாமல், குளக்கரையின் மேலேயே தலையில் தண்ணீர் தெளித்துக் கொண்டு பல்வேறு குடும்பத்தினர் திதி கொடுத்து சென்றனர்.
இதையும் படிங்க: மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த மக்கள் - திருப்பியனுப்பிய காவல் துறை