திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்து ஆத்துவாம்பாடி கிராமத்தில் சைக்கிள் ரிப்பேர் கடை வைத்து நடத்தி வரும் ராஜ நிலா (53) குடும்பத்திற்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த காமராஜ், சங்கர் குடும்பத்திற்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இந்தத் தகராறில் இரு தரப்பினரின் வீடுகளும் சேதமாகின. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ராஜநிலா, அவரது மகன் தங்கராசு, சுப்பிரமணி ஆகிய மூன்று பேரும் ஆத்துவாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பாக நின்று கொண்டிருந்தபோது கட்டிபூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், அவரது மகன் விஷ்ணு, சீனிவாஸ், ஆத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த குமார், அவரது மனைவி மங்களம் ஆகியோரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர்.