திருவண்ணாமலை: ஆரணி அடுத்த சந்தவாசல், படவேடு, புஷ்பகிரி, வெள்ளூர், கொட்டாவூர் ஆகிய பகுதிகளில் வாழை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு 13 முதல் 15 மாதங்கள் வளரக் கூடிய வாழை ரகங்களான மஞ்சள், செவ்வாழை, கற்பூரவள்ளி, ஏலக்கி உள்ளிட்ட வாழைகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
இந்த நிலையில், வங்க கடலில் உருவான மாண்டஸ் புயலால் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. அதிவேகமாக காற்று வீசியதில் 500 ஏக்கரில் பயிரடப்பட்ட சுமார் 50 ஆயிரம் வாழை மரங்கள் மண்ணோடு சாய்ந்து சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒரு கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வாழை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடந்த முறை வாழை பயிர் சேதமான போது உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் இந்த முறையாவது சரியான நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Mondous cyclone : 50 ஆயிரம் வாழை சரிந்து ரூ.1 கோடி இழப்பு... விவசாயிகள் கதறல்.... - விவசாயிகளுக்கு கோடி ரூபாய் இழப்பு
மாண்டஸ் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் சூறாவளிக் காற்றில் சிக்கி 50 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்ததால் ஏறத்தாழ 1 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வாழை சரிவு