திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராமநாதபுரம் கிராமத்தில் அரசு பள்ளி ஆசிரியர் அரிகிருஷ்ணன் என்பவரின் 16 வயது மகன் தன நாராயணன் கடந்த மாதம் 24 ஆம் தேதி அவரது வீட்டு அருகே உள்ள தரை கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டார்.
ஜல சமாதி அடைந்த சிறுவன்: உடற்கூறாய்வுக்கு உடல் தோண்டி எடுப்பு! - ஜீவ ஜல சமாதி அடைந்த சிறுவன்
திருவண்ணாமலை: ஜல சமாதி அடைந்த 16 வயது சிறுவனின் மரணத்தில், சந்தேகம் இருப்பதால் உடற்கூறாய்வு செய்வதற்காக சிறுவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
ஜீவ ஜல சமாதி அடைந்த சிறுவன்: உடற்கூறாய்வுக்கு உடல் தோண்டி எடுப்பு!
இந்நிலையில், வேலூர் மாவட்டம் திமிரியை சேர்ந்த சாமியார் பழனி என்பவரது ஆலோசனைப்படி நாராயணன் ஜல சமாதி அடைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இறந்த சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து இன்று சிறுவனின் சமாதியை தோண்டி, சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
Last Updated : Apr 22, 2019, 10:12 PM IST