திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த கோடை காலத்தில் குடிநீர் பிரச்னை அதிகளவில் காணப்பட்டன. இந்தியாவிலேயே திருவண்ணாமலை மாவட்டம் நிலத்தடி நீர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் போர்கால அடிப்படையில் ஏரிகள், குளங்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக இரவு நேரங்களில் ஆரணி, கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது.
இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையின் அளவு 70.08 மி.மீ., பதிவாகி உள்ளன. இதனால் கண்ணமங்கலத்தில் உள்ள நாகநதி ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.